18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க பெயரை சூட்ட எந்தவொரு பரிசீலனையும் மாநில அரசிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை – விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்.

மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க பெயரை சூட்ட எந்தவொரு பரிசீலனையும் மாநில அரசிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை – விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்.

எழுதியவர்: mohan August 12, 2021, 6:10 am

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டுவந்தனர்.இந்நிலையில் 16 வது நாளாக இன்று நாடாளுமன்றம் முடங்கியது. கூட்டத் தொடரின்போது மாநிலங்களவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட அரசு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்,மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில் விமான நிலையங்களின் பெயரிடுதல்/மறுபெயரிடுவதற்கான முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படுகின்றன.இருப்பினும், மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு மறுபெயரிடுவதற்கான எந்தவொரு திட்டமும் மாநில அரசிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!