17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரியில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது…

கீழக்கரை தாசீம் பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரியில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2017, 4:44 pm

கீழக்கரையில் உள்ள பெண்களுக்கான தாசீம் பீவி அப்துல்காதர் கல்லூரியில் இன்று (26-01-2017) குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சி கல்லூர் மாணவி முகம்மது அஃப்ரின் பானுவின் குர்ஆன் கிராத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர். சுமையா வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காலித் AK. புஹாரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து திருமதி. சபிதா காலித் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவிகள் சார்பாக சிறப்புரையை M. ராஜேஸ்வரி வழங்கினார். அதைத் தொடர்ந்து நன்றியுரையை M. செய்யது சமீயா வழங்கினார். பின்னர் நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!