18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்.

பொதுத் துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan August 10, 2021, 7:00 am

மதுரை தெற்குவாசல் பகுதியில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, தொழிலாளர்களின் கோரிக்கைகளாக பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌.இதில் ,50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும், தொழிலாளருக்கு விரோதமான சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவும், தனியார்மயமாக்கும் மின்சாரச் சட்டம் 2020 கைவிடக் கோரியும், ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கிகள், அரசு போக்குவரத்து, பாதுகாப்பு துறை, விமான போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பெட்ரோலிய நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஏழு தொழிற்சங்க அமைப்புகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!