17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் திமுக உட்கட்சி பூசல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு அடிஉதை .

ராஜபாளையத்தில் திமுக உட்கட்சி பூசல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு அடிஉதை .

எழுதியவர்: mohan August 9, 2021, 6:41 am

ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்தி நகர திமுக இளைஞரணி சார்பில் நகர இளைஞரணி அமைப்பாளர் ஜெயராஜ் மற்றும் துணை அமைப்பாளர் அருள் உதயா ஆகியோர் ராஜபாளையம் முடங்கியார் சாலையில் போஸ்டர் ஒட்டிக்கொண்டு இருந்தனர். அந்த போஸ்டரில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தின் புகைப்படம் இல்லாமல் இருந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட ஆனந்த் அவரது செலவில் அணைவரது புகைப்படமும் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை கொண்டு வந்து இதனை ஒட்டுங்கள் என்று கொடுத்துள்ளார். அதற்கு ஜெயராஜீம் அருள் உதயாவும் உனது படம் போட்ட போஸ்டரை ஒட்ட முடியாது என்று கூறியுள்ளனர். அப்பொழுது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயராஜீம் அருள் உதயாவும் ஆனந்தை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ஆனந்த் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!