17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் தமுமுக மமக பொதுக்குழு கூட்டம்;புதிய நிர்வாகிகள் தேர்வு..

நெல்லையில் தமுமுக மமக பொதுக்குழு கூட்டம்;புதிய நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: mohan August 7, 2021, 7:27 am

நெல்லை மாவட்டம் மேலப் பாளையம் பகுதியில் தமுமுக மமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மேலப்பாளையம் வடக்கு பகுதி தெற்குபகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுபுதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி ஹூசைன் மன்பஈ, மமக மாவட்ட செயலாளர் டவுன் ஜமால், ஐபிபி மாவட்ட பொறுப்பாளர் ஹூசைன் அல்தாபி ஆகியோர் ‌சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர்கள் அ.காஜா, பெஸ்ட் ரசூல், இளைஞர் அணி மாநில துணை செயலாளர் ரியாஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், ஊடக அணி மாவட்ட பொருளாளர் மேலப்பாளையம் செய்யது, ஐபிபி மாவட்ட பொருளாளர் ஞானியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மேலப்பாளையம் வடக்கு பகுதி, தெற்கு பகுதி என இரண்டு பகுதியாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது, வார்டு எண் 38,37,36,32,31,30 மேலப்பாளையம் வடக்கு பகுதி எனவும், வார்டு எண் 35,34,33,29, தெற்கு பகுதி எனவும் பிரிக்கப்பட்டது. பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டது. மேற்கண்ட இரண்டு ‌பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஓட்டெடுப்பு மூலம் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு பகுதி தமுமுக மமக‌ தலைவராக குதா முகம்மது , தமுமுக செயலாளராக ஜபருல்லாஹ் மமக செயலாளராக அப்துல் அஜீஸ் பொருளாளராக கா.அ.மீரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், தெற்கு பகுதி தலைவராக மாலிக் சேக், தமுமுக செயலாளராக அர்ஷத் கரீம், மமக செயலாளராக சேக்மதார், பொருளாளராக அசன் மைதீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தாயகம் வந்துள்ள தமுமுக மமக கத்தார் நிர்வாகிகள் முகம்மது மைதீன், முகம்மது ஹனீபா, சவுதி ஜித்தா நிர்வாகி பத்ருதீன்ஷா நாசர், அல்அய்ன் மைதீன், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஸ்டிக்கர் காஜா, தமிமுன் அன்சாரி, நசீர், அஜ்மல், அப்பாஸ், புரோஸ்கான், தாசின், அஜ்மல், நாகூர் மீரான், முன்னாள் நிர்வாகிகள் கலிலுர்ரஹ்மான், E.M.அபதுல்காதர், தமிமுன் அன்சாரி, வார்டு நிர்வாகிகள் பிரேம் நவாஸ், ரிபாய், ஹூசைன் பாய், ஆட்டோ அசன், பாபு கான், சிராஜ், பைசல், சேக், அக்பர், MTS நிர்வாகிகள் மைதீன், கருப்பசாமி, சேக், திப்புசுல்தான், மஜீத், சலாவுதீன் உள்ளிட்ட திரளான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தெற்கு பகுதி தலைவர் மாலிக் சேக் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!