திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் அவர்கள் ஆலோசனைப்படி நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.பள்ளி துணை ஆய்வாளர் முனைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார் சிறப்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து ஆலோசனைகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு ஊர் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் பரமனந்தல் முக்கிய வீதி வழியாக பேரணி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோய் தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மேலும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசங்கள் வழங்கினர் பேரணியில் பரமனந்தல் சமூக ஆர்வலர் வீரவாகு எமதர்மராஜா வேடமிட்டு கொரோனா நோய் தொற்று குறித்து பொதுமக்களிடையே விளக்கம் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரவீன் ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
பரமனந்தல் அரசுப்பள்ளியில் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு பிரச்சார பேரணி; மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.
எழுதியவர்: mohan August 7, 2021, 6:55 am




You must be logged in to post a comment.