17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடல் மீன் வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி CITU சார்பாக கீழக்கரை கடற்கரை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

கடல் மீன் வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி CITU சார்பாக கீழக்கரை கடற்கரை அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2021, 8:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரை பகுதியில் சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பில்  டெல்லியில் மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு அமல்படுத்த இருக்கும் புதிய மீன்வள மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தியும்,  புதிய மீன்பிடி மசோதாவால் வரையறுக்கப்பட்ட எல்லையில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க வேண்டும் மீன் பிடிப்பதற்கான அனுமதிக்கு உரிய தொகை செலுத்தி மீன்பிடிக்கச் செல்ல வேண்டும்  உள்ளிட்ட தமிழக மீனவர்களை நசுக்க கூடிய வகையில் ஒன்றிய அரசு புதிய மீன்பிடி சட்டம் அமல் படுத்தி உள்ளது.

புதிய மீன்வளம் மசோதாவை ஒன்றிய அரசு தமிழகத்தில் அமல்படுத்துவது ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!