18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாடகை இருசக்கர வாகனம் தடை செய்ய தமிழக அரசு முன்வருமா.

போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாடகை இருசக்கர வாகனம் தடை செய்ய தமிழக அரசு முன்வருமா.

எழுதியவர்: mohan August 6, 2021, 11:00 am

தமிழகம் முழுவதும் தனியார் கால் டாக்ஸி பைக்குகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது இதனை தடுக்க தமிழக அரசு போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இருசக்கர வாகனங்களில் வாடகை வாகனமாக பயன்படுத்த முடியாது ஏனென்றால் சொந்த உபயோகத்திற்கு மட்டுமே இரு சக்கர வாகனத்தை பயன்படுத்த முடியும் வாடகை வாகனமாக பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கென தனியாக காப்பீட்டு மற்றும் தணிக்கைகள் செய்யவேண்டும் ஆனால் இரு சக்கர வாகனத்தில் அதுமாதிரி எந்தவிதமான நடைமுறை கிடையாது புற்றீசல் போல் தமிழகம் முழுவதும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை செய்யும் தனியார் பைக் கால் டாக்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் சட்ட விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது எனவும் மேலும் பாதுகாப்பு இல்லாத பயணமாகவே இருசக்கர வாகன கால் டாக்சிகள் இயக்கப்படுகிறது சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டுவருகிறது இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ கால் டாக்ஸி மற்றும் வாடகை ஓட்டுனர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றனர் இதுகுறித்து தமிழக அரசு மற்றும் காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!