17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மங்களம் அரசுப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு.

மங்களம் அரசுப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan August 6, 2021, 9:53 am

திருவண்ணாமலை அடுத்த மங்களம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் ஆலோசனையின் படியும் பள்ளித் தலைமையாசிரியர் சசிகலா தலைமையில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதுஇந்நிகழ்வில்முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும்  கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மங்கலம் பகுதியில் முக்கிய வீதிகளில் தலைமையாசிரியர் சசிகலா மற்றும் ஆசிரியர் பொதுமக்களுக்கு தொற்றுநோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!