18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தல்..

சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு; அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறுத்தல்..

எழுதியவர்: mohan August 2, 2021, 9:49 am

சுரண்டை பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் துவக்கமாக பொதுமக்களுக்கு மருத்துவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கினர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் துவங்கியது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வாரம் நடந்த உத்தரவிட்டு அதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் ஆலோசனையின் பேரில் சுரண்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மூன்றாவது அலை வராமல் தடுப்பது குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜகுமார் விளக்கம் அளித்தார்.

தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் உதவி திட்ட அலுவலர் டாக்டர் கீர்த்திகா பொதுமக்களுக்கு முக கவசம், துண்டு பிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் கேடிகே காமராஜ், செய்தி தொடர்பாளர் ராஜகுமார், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகி கணேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திர குமார், கிருஷ்ணமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஜெயபரகாஷ், ராமர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கடகோபு செய்திருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!