17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீக்குளித்த மகனும் காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு .

தீக்குளித்த மகனும் காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழப்பு .

எழுதியவர்: mohan July 28, 2021, 5:20 am

மதுரையில் தீக்குளித்த தாயும், காப்பாற்ற முயன்ற தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.மதுரை மேல அனுப்பானடி டீச்சர்ஸ்காலனி பகுதியை சேர்ந்தவர். அருண் சக்கரவர்த்தி(28). இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும் வேலையின்றியும் இருந்துள்ளார். இதில் விரக்தியடைந்த அருண் சக்ரவர்த்தி இரு தினங்களுக்கு முன் தீக்குளிக்க முயன்றார். அப்போது அவரது தாய் செல்வ ஈஸ்வரி காப்பற்ற முயன்றார். இதில் இருவரும் பலத்த காயமுற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தனர். இந் நிலையில் நேற்றிரவு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!