18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு பத்திரமாக மீட்பு;தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு..

சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு பத்திரமாக மீட்பு;தீயணைப்புத்துறை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு..

எழுதியவர்: mohan July 27, 2021, 11:13 am

சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டு உரியாளரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள துரைசாமி புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் பசுமாட்டை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த பசுமாடு நேற்று முன்தினம் மாலை விவசாய கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி சுமார் 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுரண்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் வீரர்கள் பாலகிருஷ்ணன், திலகர், சமுத்திரபாண்டி, உலகநாதன், நான்முகராஜன், ஆகியோர் விரைந்து சென்று கிணற்றிற்குள் இறங்கி கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்‌.தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!