18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விலையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை.

அலங்காநல்லூர் பகுதியில் அதிகளவில் விலையும் கொய்யா பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை.

எழுதியவர்: mohan July 27, 2021, 7:07 am

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில், விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர்.இங்கு விளையும் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழசந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.35 கிலோ எடையுள்ள, கொய்யா ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை கிடைத்து வந்தது.ஆனால், தற்போது அதிகளவில் கொய்யா பழம் விளைந்து வருவதால், சந்தையில், விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்றும், கூலிஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், வேதனையடைந்த விவசாயிகள் குவியல் குவியலாக பழங்களை கீழே கொட்டி வருகின்றனர்.தொடர்ந்து,கால்நடைகளுக்கும்இரையாக்குகின்றனர். மேலும், இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலையும் அமைத்து உரிய ஆதார விலை கிடைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!