திருவண்ணாமலை காந்தி நகரில் அமைந்துள்ள ஆல்ஃபா மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு முகாம் ஆல்பா மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது. மையத்தின் இயற்கை மருத்துவர் லட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் தமிழ்நாடு பாரத சாரண இயக்கத்தின் பயிற்சியாளர் பியூலா கரோலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி பேசுகையில்; திருவண்ணாமலையில் செயல்படும் இந்த மறுவாழ்வு மையம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில்உடல் உழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு அவர்களில் பலர், மதுவுக்கு அடிமையாகி விட்டனர். இன்னும் சிலர் சினிமாவைப் பார்த்து விட்டு சீரழிகின்றனர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.உடல் உழைப்பு சார்ந்த தொழிலில் ஈடுபட்டு அவர்களில் பலர், மதுவுக்கு அடிமையாகி விட்டனர்.மேலும் போதைப் பொருட்களை தமிழக அரசு தடை செய்த உள்ளது இது வரவேற்கத்தக்கதாகும் . முனைப்புடன் செயல்பட்டு மதுவை தடை செய்ய வேண்டும் நம்முடைய சொல்லும் செயலும் தான் அழகு இதை நாம் ஒன்று கொள்ள வேண்டும். சிகிச்சை முடிந்த பின்னர் புதிய மனிதராக வாழ்ந்து சாதனை படைக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சிகள் ஆதாம், வினோத் பாலுசாமி, ஆதிந்திரன், ரேணுகா, முரளி மற்றும் மையத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை ஆல்பா மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு முகாம் ; திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி பங்கேற்பு.
எழுதியவர்: mohan July 26, 2021, 6:31 am




You must be logged in to post a comment.