18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு வருடத்திற்கு பிறகு திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் நடைபெற்ற தொழுகை.

ஒரு வருடத்திற்கு பிறகு திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் நடைபெற்ற தொழுகை.

எழுதியவர்: mohan July 22, 2021, 7:40 am

மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவில் பக்ரீத் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.கொரோனா பெரும் தொற்று காரணமாக சென்ற வருடம் ரம்ஜான் மற்றும் பக்ரீத் திருநாள் அன்று இந்த தொழுகை சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவில் நடைபெறாத நிலையில் இந்த வருடம் பக்ரீத் திருநாளான இன்று திருப்பரங்குன்றம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவ்லியா தர்காவில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்த தொழுகையின் போது சுமார் 70 இஸ்லாமிய சகோதரர்கள் பங்கு பெற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!