17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் மற்றும் இந்திய நீரிழிவு சங்க ஓருங்கணைப்பாளர்கள் இணைந்து நடத்திய பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்..

கீழக்கரை இஸ்லாமியா பைத்துல்மால் மற்றும் இந்திய நீரிழிவு சங்க ஓருங்கணைப்பாளர்கள் இணைந்து நடத்திய பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் December 26, 2017, 12:13 pm

கீழக்கரையில் இன்று (26/12/2017) ஜதக்கத்துன் ஜாரியா பள்ளி வளாகத்தில் இஸ்லாமியா பைத்துல்மால் மற்றும் இந்திய நீரிழிவு சங்க ஓருங்கணைப்பாளர்கள் இணைந்து நடத்திய பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தேவையுடையவர்களுக்கு பரிசோதனைகளும். ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் அனைத்து தெரு ஜமாத்தினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி கிராத்துடன் தொடங்கியது. வரவேற்புரையை அகமது மாலிக் வழங்கினார், அறிமுகவுரையை செய்யது இபுராகிமும், விளக்கவுரையை ஹபீபுல்லாவும்,   மேலும்  அல்ஹரமைன் அறக்கட்டளை நிறுவனர் முஹம்மது ரஃபி பைத்துல்மாலின் செயல்பாடுகளை விளக்கினார். இறுதியாக நன்றியுரையை முகைதீன் தம்பி வழங்கினார். இம்மருத்துவ முகாமில் மருத்துவர்கள் செய்யது அப்துல்காதர் மற்றும் லிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த பரிசோதனையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

மேலும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை யாசின், ஹமீது சுல்தான், சிவா மற்றும் எபன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!