17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சியில் வாழ்க வரியாளர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்:

மதுரை மாநகராட்சியில் வாழ்க வரியாளர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்:

எழுதியவர்: mohan July 13, 2021, 7:59 am

மதுரை மாநகராட்சியின் சார்பில் அணைத்து மண்டலங்களிலிலும் 100- வார்டுகளுக்கான வாழ்க வரியாளர் சிறப்பு குறை தீர்க்கும் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், செய்தியாளர்களிடம் கூறியது:மதுரை மாநகராட்சியில் சார்பில் மண்டலம் வாரியாக இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமானது, இம் மாதம் 13-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.முகாம், காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறும்.முகாமில், புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், வாரிசு அடிப்படையில் பெயர் மாற்றம், உயில் அடிப்படையில் பெயர் மாற்றம், காலிமனை வரி ஆகியவற்றிக்காக, முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள், அதற்குரிய படிவத்தினை வாங்கி பூர்த்தி செய்து, ஆவணங்களை, அதனுடன் இணைத்தும், அதற்குரிய கட்டணத்துடன் விண்ணப்பத்தை அளிக்க கேட்டுக் கொண்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!