17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ….

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் ….

எழுதியவர்: ஆசிரியர் December 22, 2017, 7:09 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ பயிலும் இயந்தரவில் துறை. மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, அமைப்பியல்துறை மற்றும் கணினித்துறை மாணவ மாணவியர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் டாக்டர் அ. அலாவூதின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கல்லுரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் ராஜேந்திரன் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கினைப்பாளருமான சேக்தாவூத் ஆ‌கியோ‌ர்கள் வாழ்த்துரை வழங்கினர். இந்த முகாமில் மும்பை பாஸ்டன் ஐ. டி. சாப்ட்வேர் சொலுசன் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளர் கேத்தன் தேசாய் வளாக நேர்முகத் தேர்வினை நடத்தினார். இந்நேர்முக தேர்வில் மொத்தம் 220 மாணவர்கள் கலந்து கொண்டனர், இதில் 27 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இத்தேர்வு மூலம் பணியமர்த்தபடும் மாணவர்களுக்கு 2.5 லட்சம் ஆண்டுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் பாராட்டி அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக கல்லுரியின் துணை முதல்வர் சேக்தாவூத் நன்றியுரையாற்றினார். இந்த வளாக தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் துணை முதல்வர்கள் இராஜேந்திரன், சேக்தாவூத், துறைதலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் மரியதாஸ், ஆ‌கியோ‌ர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!