17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் 26-12-2017 அன்று சக்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ..

கீழக்கரையில் 26-12-2017 அன்று சக்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் ..

எழுதியவர்: ஆசிரியர் December 22, 2017, 2:25 am

கீழக்கரையில் 26-12-2017 (செவ்வாய் கிழமை) அன்று இஸ்லாமி பைத்துல்மால் மற்றும் இந்திய நீரிழிவு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இணைந்து மாபெரும் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இம்முகாம் சதுக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் தொடங்க உள்ளது.

இம்முகாமில் பைத்துல்மால் பற்றிய சிறப்புரையை அல் ஹரமைன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் UNWO பொதுச் செயலாளர் S.முஹம்மது ரஃபி வழங்க உள்ளார். மேலும் இந்த முகாமில் சர்க்கரை நோய் கல்வியாளர் செய்யது அப்துல் காதர் மற்றும் பொதுநலம் மற்றும் சக்கரை நோய் நிபுணர் லிங்கராஜன் வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சி இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களுக்கு மட்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை கீழக்கரை இஸ்லாமி பைத்துல்மால் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இந்நிகழ்வில் சர்க்கரை நோய் பற்றிய வகுப்புகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபறும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!