17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அமமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் அமமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan July 10, 2021, 6:32 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து உசிலம்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக கூட்டமானது அமமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாருமான மகேந்திரன் தலைமையிலும், தெற்கு ஒன்றிய செயலாளர் மலேசியாபாண்டி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாகவும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சிந்துபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், நகர செயலாளர் குணசேகரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஏகேடி ராஜா உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!