18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று சுகாதார பணிகளை தொடங்கிய கீழக்கரை நகராட்சி..

திமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று சுகாதார பணிகளை தொடங்கிய கீழக்கரை நகராட்சி..

எழுதியவர்: ஆசிரியர் July 10, 2021, 3:36 pm

கீழக்கரை கடற்கரை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளே கீழக்கரை மக்களுக்கு மாலை நேர பொழுது போக்கும் இடங்களாகும்.  இப்பகுதியை தூய்மையாக வைக்க நகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனங்களும் பல் வேறு முயற்சிகள் எடுத்தாலும் பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் குப்பைகள் குவிந்த வண்ணம் உள்ளது.

அதே போல் கீழக்கரை கடற்கரையில் அமைந்துள்ள ஜெட்டி பாலத்தின் நிலையை சமீபத்தில் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பார்வையிட்டு சென்றார்.  இதன் தொடர்ச்சியாக கீழக்கரை திமுக நிர்வாகிகள் கீழக்கரை நகராட்சிக்கு வைத்த கோரிக்கையை ஏற்று ஜெட்டி பாலம், கடற்கரையை ஒட்டியுள்ள பழைய பெட்ரோல் பங்க் பின்புறம் பகுதி என அப்பகுதியை தூய்மைபடுத்தும் பணிகளை தொடங்கினர். கோரிக்கையை ஏற்று பணிகளை தொடர்ந்து செய்து வரும் நகராட்சி நிர்வாகத்துக்கு கீழக்கரை திமுக நிர்வாகி மூர் ஹசனுதீன் நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!