17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வலையங்குளம் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் வாலிபர் கொலை. பெருங்குடி போலீஸார் விசாரணை.

வலையங்குளம் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் வாலிபர் கொலை. பெருங்குடி போலீஸார் விசாரணை.

எழுதியவர்: mohan July 10, 2021, 10:32 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்து முனியாண்டி வயது 38 இவர் சௌராஷ்டிரா காலனி பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார் இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று முத்து முனியாண்டி உடலை கைப்பற்றி உடற்கூற்று பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்த முத்து முனியாண்டியின் தந்தை மொக்கையன் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறு காரணமாக இவரது தம்பி கொலை செய்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று வலையங்குளம் பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!