17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை, திருவாடானை மற்றும் பல பகுதியில் நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் ..

கீழக்கரை, திருவாடானை மற்றும் பல பகுதியில் நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் December 20, 2017, 8:22 pm

கீழக்கரையில் இன்று (20/12/2017) கிராம நிர்வாக அலுவலர்கள் ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த மாதம் 29/11/2017 அன்று விடாத மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய போராட்டம் கீழக்கரை வட்ட தலைவர் கருப்பையா முன்னிலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 15 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மீண்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அதேபோல் திருவாடானையில் தமிம் நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://keelainews.in/2017/11/29/klk-vo-protest/

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!