17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீனிவாசா காலணி சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்தும், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது.

சீனிவாசா காலணி சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்தும், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது.

எழுதியவர்: mohan July 8, 2021, 7:45 am

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விளாச்சேரி கிராமத்தில் இருந்து சீனிவாசா காலணி வழியாக நான்கு வழிச்சாலை செல்ல சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை உள்ளது. வேலைக்கு செல்லும் இந்த பகுதி மக்கள் இந்த சாலை வழியாக கப்பலூர், திருமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, சமயநல்லூர் , கீழக்குயில்குடி ஆகிய ஊர்களுக்கு டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். தினமும் இந்த சாலையை சுமார் 1000 க்கு மேற்ப்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் சீனிவாசா காலணியில் இருந்து மதுரை நகருக்குள் சென்று வருபவர்களும் இந்த சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்தும், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாகவும் உள்ளது. கடந்தஒரு ஆண்டுக்கு மேலாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியினர் இந்த சாலையை சரி வர பயன்படுத்த முடியாமல் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால் நீண்ட தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என இப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!