18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் டாஸ்மாக் மது பாட்டிலில் பேப்பர் மிதந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி .

மதுரையில் டாஸ்மாக் மது பாட்டிலில் பேப்பர் மிதந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி .

எழுதியவர்: mohan July 8, 2021, 7:37 am

கடந்த மாதம் ஜூன் 14 ஆம் தேதி ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மது பிரியர் ரஞ்சித் குமார் என்பவர் வாங்கிய மதுபாட்டில் ஒன்றில் பேப்பர் மேலும் கீழும் இருந்துள்ளது 120 ரூபாய்க்கு வாங்கப்பட்டது மதுபாட்டிலில் பேப்பர் ஒன்று இருந்ததை கண்ட ரஞ்சித்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார் அரசு மதுபான கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலில் கலப்படம் செய்தது போல இருந்தது மன வேதனையை தருவதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் ஏற்கனவே மதுரையில் தரமற்ற மலிவான மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தற்போது மதுபாட்டிலில் பேப்பர் மிதக்கும் சம்பவம் மது பிரியர்கள் இடையே அதிர்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!