18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை : பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மதுரைக்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுதியவர்: mohan July 5, 2021, 6:44 am

துணை நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் மணிகண்டனை மதுரை அழைத்து சென்று விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் நள்ளிரவு மதுரைக்கு அழைத்து வந்து மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்தனர்.தொடர்ந்து அங்கிருந்து அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு விசாரணை நடத்த அழைத்துச் வந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து மணிகண்டனின் ஜாமின் மனுவை ஜூலை 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!