17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே சுங்கச்சாவடி கணினி அறை மீது விழுந்து தரைமட்டமாது.

கொடைரோடு அருகே சுங்கச்சாவடி கணினி அறை மீது விழுந்து தரைமட்டமாது.

எழுதியவர்: mohan July 4, 2021, 9:42 am

கொடைரோடு அருகே உள்ள நான்கு வழி சாலையில் கொடைரோடு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் சாலையின் இருபுறங்களிலும் தலா 5 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த அனைத்து வழித்தடங்களிலும் தானியங்கி கணினி அறைகள் உள்ளன.நேற்று விளாத்திக்குளத்தில் இருந்து ஒரு லாரி மரக்கறி ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது.லாரியை சாத்தூர் தாலுகா சிங்கம் பட்டியை சேர்ந்த சிங்கம்பட்டி ரவி கண்ணன் வயது 36. என்பவர் ஓட்டினார். வழியில் கொடடைரோடு சுங்கச்சாவடி 7 வது வழித்தடத்தில் லாரி வந்தபோது மரக்றி மூட்டைகள் அருகில் உள்ள கணினி அறை மீது விழுந்து தரைமட்டமாது. இந்த விபத்தில் அந்த அறையில் இருந்த கணினி. கேபிள் வயர்கள் ஆகியவை சேதம் அடைந்தது. சுங்கச்சாவடி ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!