வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட அதிமுக மாநகரம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலையில்ல அரிசி மூட்டைகளை வழங்கிவருகிறது.
அதிமுக சார்பில் முதல் தொற்று அலையில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஏழை எளிய மக்களுக்கு இலவச நிவாரண பொருள்களை மாவட்ட செயலாளர் அப்பு வழங்கினார்.தற்போது அதிமுக எதிர்கட்சியாக இருக்கும் நிலையிலும் கடந்த 2 மாதங்களாக வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் 2000 -க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா அரிசி மூட்டைகளை மாநகர மாவட்ட அதிமுக வழங்கிவருகிறது.நேற்று முதலாவது மாநகராட்சி மண்டலமான பழைய காட்பாடி, சித்தூர் பஸ் நிலையம் அருகில் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு, தூய்மை பணியாளர்கள் 300 பேருக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்கள் ரவி, ராஜேஷ், அமர்ந்த, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
வேலூரில் திமுக மவுனம்.அதிமுகவினர் நலத்திட்ட உதவி வழங்கல்
எழுதியவர்: mohan July 3, 2021, 5:43 pm




You must be logged in to post a comment.