17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அஸ்வநாகசுரணை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா விழிப்புணர்வு .

அஸ்வநாகசுரணை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொரோனா விழிப்புணர்வு .

எழுதியவர்: mohan July 3, 2021, 4:25 pm

திருவண்ணாமலை அடுத்த அஸ்வநாகசுரணை கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார் தடுப்பூசி முகாம் ஒருங்கிணைக்கும் பணியை ஊராட்சி எழுத்தர் அண்ணாதுரை மேற்கொண்டார் செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் அருள் நாராயணதாஸ் முன்னிலையில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் அல்லநாகசுரணை கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து செலுத்தி கொண்டனர். கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். என்று ஊராட்சிமன்ற தலைவர் மகாலட்சுமி மணிகண்டன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் முகாமில் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், செவிலியர்கள் ராஜலட்சுமி, காந்தா, மருந்தாளுநர் வாகித் மற்றும் சுகாதாரத் துறையினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!