18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிஞ்சூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தொடங்கிவைத்தார் .

பிஞ்சூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தொடங்கிவைத்தார் .

எழுதியவர்: mohan July 3, 2021, 7:02 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணை தலைவர் ரேணுகாம்பாள் முன்னிலை வகித்தார் . ஊராட்சி எழுத்தர் சிவசுப்பிரமணியன் முகாம் ஒருங்கிணைக்கும் பணி மேற்கொண்டார்.செங்கம் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் உத்தரவின்பேரில் மருத்துவர் சிவசூரியன் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் பிஞ்சூர் கிராமத்தை சுற்றியுள்ள பொது மக்கள் தாமாக முன்வந்து 200க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராம பொது மக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .வார்டு உறுப்பினர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளர் மாணிக்கம், செவிலியர்கள் மீரா, பச்சையம்மாள் ஊட்டச்சத்து மேற்பார்வையாளர் மகாலட்சுமி மற்றும் சுகாதாரத் துறையினர் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!