18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்தது பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்:

கட்டுப்பாட்டை இழந்த கார் கடைக்குள் புகுந்தது பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல்:

எழுதியவர்: mohan July 2, 2021, 7:29 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பெருமாள் கோவில் அருகே உள்ள நிலையூர் பஜார் பகுதியில் இளைஞர் ஒருவர் காரை காரை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார் .அப் பொழுது ,காரின் பிரேக் திடீரென பழுதானது.இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் காதில் இருந்த இளைஞர்கள் யார் மீதும் மோதாமல் இருப்பதற்காக அருகே உள்ள கடைக்குள் காரை மோதி நிறுத்தினர்.அப்பொழுது, எதிரி மூன்று இளைஞர்கள் பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள் ஒரு இளைஞர் மீது கார் மோதியது நல்வாய்ப்பாக அந்த இளைஞர் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரில் இருந்தவர்களை மீட்டனர்.பின்னர், அவர்களை விசாரித்த போது, காரில் பிரேக் பழுதானது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கலைந்து சென்றனர். கார் மோதிய சிசிடிவி காட்சி தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!