வேலூர். ஜூலை 1- வேலூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ஆட்சியர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.ஆட்சியர் உத்தரவுப்படி மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், பறக்கும் படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன், புட் செல் காவல் ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான குழுஅப்துல்லாபுரம் அருகே மோட்டூர் பிரசாந்த் நகர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.அப்போது மினிவேன் மற்றும் ஆட்டோவில் 60 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட 3 டன் ரேசன் அரிசியை ஒரு வீட்டில் இறக்குவதை பார்த்தனர்.உடனடியாக அதிகாரிகள் அரிசி, மினி லாரி, ஆட்டோவை கைப்பற்றிமினிவேன் ஓட்டுநர் ராமச்சந்திரன்(38) ஆட்டோ ஓட்டுநர் இம்ரான்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
வேலூரில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் மாவட்ட வழங்கல் அலுவலர் அதிரடி.
எழுதியவர்: mohan July 1, 2021, 10:34 am




You must be logged in to post a comment.