17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மருந்துக் கிடங்கு கட்டிடம்; மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் திறந்து வைத்தார்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மருந்துக் கிடங்கு கட்டிடம்; மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் திறந்து வைத்தார்..

எழுதியவர்: mohan July 1, 2021, 7:30 am

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் மருந்துக் கிடங்கு கட்டிடம் திறக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஜெஸ்லின் திறந்து வைத்தார்.தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த பல வருடங்களாக மருந்து கிடங்கு ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்கி கொண்டு இருந்தது. அதனை விரிவுபடுத்திடும் வகையில், தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் நெடுமாறன் ஆலோசனைப்படி, புதிதாக கட்டப்பட்ட கோவிட் கட்டிடத்தில் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. அதன் படி இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருந்து கிடங்கு கட்டிடம் 30.06.21 புதன் கிழமை திறக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் டாக்டர் அகத்தியன், பல் மருத்துவர் டாக்டர் லதா, குழந்தைகள் மருத்துவர் டாக்டர் ராஜேஷ், மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள மருந்துக்கிடங்கு கட்டிடத்தின் அருகே மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருந்துக் கிடங்கு அலுவலர் நளினா,கோமதி, மற்றும் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மருந்தாளுநர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!