17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், வி.சி.க. நூதன முறையில் போராட்டம்.

மதுரையில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட், வி.சி.க. நூதன முறையில் போராட்டம்.

எழுதியவர்: mohan July 1, 2021, 7:19 am

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மதுரையில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் நூதன முறையில் போராட்டங்கள் நடைபெற்றன .மதுரை அரசரடி பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலையில் ஹெல்மெட் அணிந்து சைக்கிளை ஓட்டி வந்து, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் இருசக்கர வாகனத்தை ட்ரை சைக்கிளில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதேபோல அவனியாபுரம் திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விறகு அடுப்பு வைத்து ரோட்டில் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்வை கண்டித்து மதுரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!