17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை முழுவதும் கட்டிட கழிவு மண் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி. கண்டு கொள்ளாத மாநகராட்சி.

சாலை முழுவதும் கட்டிட கழிவு மண் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி. கண்டு கொள்ளாத மாநகராட்சி.

எழுதியவர்: mohan June 30, 2021, 5:53 pm

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் மதுரையின் அழகை கெடுக்கும் வகையில் மதுரை காளவாசல் பைபாஸ் சாலை தெற்கு ஆர்டிஓ அலுவலகம் முதல் சாலைகள் முழுவதும் கட்டிடக் மண் கழிவுகளும் பெரிய பெரிய கற்கள் கொட்டப்பட்டு வருகிறது இதனால் காற்றடிக்கும் நேரத்தில் மணல் தூசி ஆனது இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுகிறது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலைபோல குவிந்து உள்ள கட்டிட கழிவுகளை யார் கொட்டியது ஏன் மாநகராட்சியும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை இதை அகற்ற மாநகராட்சியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் உடனடியாக அகற்ற முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலரும் பொதுமக்களும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!