18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆலங்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி;தன்னார்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு..

ஆலங்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி;தன்னார்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு..

எழுதியவர்: mohan June 30, 2021, 5:46 pm

ஆலங்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் மரங்கள் நட்டு பராமரிக்க சுற்று சூழல் தன்னார்வலர்களால் முன்னதாக திட்டமிடப்பட்து. அதன் முதற்கட்டமாக ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியில் தெரு ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்மணி மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் ஆலங்குளம் பகுதியில் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்றும், அதற்கான முழு ஒத்துழைப்பினை பேரூராட்சி நிர்வாகம் செய்யும் என்றும் செயல் அலுவலர் உறுதியளித்தார். மரக்கன்றுகள் நடும் இந்த நிகழ்ச்சியினை அண்ணாநகர் சுற்றுச் சூழல் ஆர்வலர்களான பாலா, கராத்தே கோபி, ராஜா உள்ளிட்ட தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், ஆலங்குளம் பேரூராட்சியின் அனுமதியோடு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியோடு ஆலங்குளம் பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என்றனர். சுற்றுச்சுழலை பாதுகாக்கும் ஆலங்குளம் பகுதி தன்னார்வலர்களின் இந்த சீரிய முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!