18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பெத்தெரி தெருவில் திமுக கட்சி கோரிக்கையை ஏற்று நகராட்சி சுகாதார நடவடிக்கை…

கீழக்கரை பெத்தெரி தெருவில் திமுக கட்சி கோரிக்கையை ஏற்று நகராட்சி சுகாதார நடவடிக்கை…

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2021, 3:48 pm

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை பெத்தெரித்தெரு ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கீழக்கரை தி.மு.க நகரச்செயலாளர் பஷீர் அஹமது யிடம் பெத்தெரித்தெரு வளர்ச்சிக்காக. சில கோரிக்கையை மனு கொடுத்தனர். 

அதில் ஆதிதிராவிடர் மயானக்கரை, பெத்தெரித்தெரு,  கோயில் பகுதிகளில் தெருவிளக்கு மற்றும் ரோடு போட்டு தர வேண்டி குறிப்பிட பட்டிருந்தது. கொடுக்கப்பட்ட மனுவினை ஏற்றுக்கொண்டு உடனடியாக கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதியை தொடர்புகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையை சரி செய்து தருமாறு கூறினார் அதன் தொடர்ச்சியாக இன்று அப்பகுதியில் மயானக் கரை சுத்தம் செய்யும் பணி மற்றும் தெரு விளக்கை சீர் செய்யும் பணி நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!