17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல் டீசல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு;மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

பெட்ரோல் டீசல் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு;மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: mohan June 30, 2021, 10:25 am

சுரண்டை அருகே வீ.கே.புதூரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் பகுதியில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்தும்,நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்துதல், நாடு முழுவதும் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவைகளை வலியுறுத்தியும், பொதுமக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வீரகேரளம் புதூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஜ தாலுகா தலைவர் ஐயப்பன், தலைமை வகித்தார் சிபிஎம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் சங்கரன், வெள்ளகால் கிளை செயலாளர் சீவலமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்‌ பாலு, மற்றும் மகா விஷ்ணு ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆலங்குளம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் குணசீலன் மத்திய அரசையும் விலைவாசி உயர்வையும் கண்டித்து கோசங்களை எழுப்பினார். கட்சி நிர்வாகிகள் மாடசாமி, ராதாகிருஷ்ணன், குருசாமி, ராமர் பாண்டியன், மாரியப்பன், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தை முன்னிட்டு வீகேபுதூர் எஸ்ஐ காஜா முகைதீன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!