17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய மின்மாற்றிகள் துவக்கி வைப்பு:

புதிய மின்மாற்றிகள் துவக்கி வைப்பு:

எழுதியவர்: mohan June 30, 2021, 6:54 am

துரை மேற்கு ஓன்றியம்பொதும்பு ஊராட்சி வாசன் நகர் பகுதியில் புதியதாக. டிரான்ஸ்பார்மரைவணிக வரி மற்றும் பத்திர பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்துவைத்தார். இதில், டி.ஆர்.ஓ.செந்தில்குமாரி, வெங்கடேசன் எம்.எல்.ஏ.,திமுக ஒன்றியச் செயலாளர்பொதும்பு தனசேகரன், உதவிப் பொறியாளர் மின் வாரியம், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் சித்திராதேவி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய மின் மாற்றி திறப்பு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகர் பகுதியில் 110 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மின்வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!