திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அரசால் நடத்தப்படுகின்ற தேசிய திறனறித் தேர்வில் செங்கம் ஒன்றிய அளவில் முதலிடத்தை பிடித்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் கவின் , மற்றும் பிரதீப் ஜானகிராமன், முகில் அரசன் ஆகிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர், மாணவர்கள் வெற்றி பெற்றதையடுத்து வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார் உடன் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி, பள்ளி ஆசிரியர்கள் தனலஷ்மி, சங்கீதா , அரசு மற்றும் ஆசிரியர்கள் , மாணவ பெற்றோர்கள் உடன் இருந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் ஊட்டி மகிழ்ந்தனர்
செங்கம் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்த மேல்பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு
எழுதியவர்: mohan June 28, 2021, 5:03 pm




You must be logged in to post a comment.