18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர்ந்து மதுரையில் பசுமாடுகள் மீது ஆசிட் வீச்சு – கால்நடைகள் மீதான வன்முறை அதிகரிப்பு.!!

தொடர்ந்து மதுரையில் பசுமாடுகள் மீது ஆசிட் வீச்சு – கால்நடைகள் மீதான வன்முறை அதிகரிப்பு.!!

எழுதியவர்: mohan June 28, 2021, 7:12 am

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மீதான வன்முறை சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது,மதுரை மாநகர் பகுதிகளான புதூர்,சூர்யா நகர்,தல்லாகுளம், ஆனையூர் பகுதிகளில் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் பசு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகள் மீது இரவு நேரங்களில் மர்ம நபர்கள் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றுதால் மாடுகள் படுகாயமடைந்து சாலையில் ரத்த காயங்களுடன் சுற்றித்திரியும் அவல நிலை உருவாகி உள்ளது, இந்த சம்பவம் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் கால்நடைகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்,மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க புதூர்,கூடல்புதூர்! தல்லாகுளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது! இதுமட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் சாலையோரம் உள்ள தெரு நாய்களுக்கும் விஷம் வைத்துக் கொள்ளும் சம்பவமும் அதிகரித்துள்ளது,கடந்த 2 மாதத்தில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் குருணை மருந்து வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது,மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை அந்த பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!