17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாசுதேவநல்லூர் அருகே அரிய வகை இரட்டை சக்கர நாகம்..

வாசுதேவநல்லூர் அருகே அரிய வகை இரட்டை சக்கர நாகம்..

எழுதியவர்: mohan June 28, 2021, 6:59 am

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே 4 அடி நீளமுள்ள அரியவகை இரட்டை சக்கர நாகம் பிடிக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூர் அருகே உள்ள முள்ளிக்குளம் பகுதியில் குருவம்மாள் என்பவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா, நிலைய அலுவலர் போக்குவரத்து செல்வ முருகேசன் ஆகியோர் தலைமையில் பால்ராஜ் ராமச்சந்திரன் ஆகியோர் சென்று குருவம்மாள் என்பவர் வீட்டில் இருந்து நான்கு அடி நீளமுள்ள இரட்டை சக்கர நாகத்தை பிடித்தனர். பின்னர் வாசு வனவர் உபேந்திரன் தலைமையிலான வனத்துறையினரிடம் இந்த அரிய வகை நாகத்தை ஒப்படைத்தனர்.வனவர் உபேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் தலையணையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பாம்பை கொண்டு சென்று விட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!