18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் மலையில் இருந்த இஸ்லாமியர்களின் கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் 200-க்கும் மேற்பட்டோர் கைது…

திருப்பரங்குன்றம் மலையில் இருந்த இஸ்லாமியர்களின் கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் மதுரையில் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் 200-க்கும் மேற்பட்டோர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2021, 7:12 pm

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள தர்கா கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி இணைந்து ஹார்வி பட்டியில் சாலைமறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோன்று கோரிபாளையம் பகுதியிலும் சாலை மறியலில் 25 பெண்கள் உள்பட 125 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் கோவில் மலை மேலுள்ள சிக்கந்தர் தர்கா உள்ளது. இங்குள்ள கொடிமரத்தை அகற்றியதை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினரை சேர்ந்த 125 பேர் ஹார்வி பட்டியில் திடீரென சாலை மறியல் செய்தனர்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் தடையை மீறி திடீரென சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!