17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் , குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் , குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan June 26, 2021, 6:23 pm

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமணாமரத்தூர் தொன் போஸ்கோ மைய வளாகத்தில் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் சைல்டு லைன், மற்றும் மாவட்ட துணை மையம் சார்பில் இணைந்து நடத்திய குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்தல் மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் சார்ந்த விழிப்புணர்வு சைல்ட் லைன் இயக்குனர் செழியன் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ரெட்டி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து பெற்றோர்களுக்கும் காவல்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலர்களும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை உடனே தடுப்பதற்கு உங்களால் மட்டுமே முடியும் என சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சைல்டு லைன் மாவட்ட திட்ட இயக்குனர் முருகன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஜவ்வாதுமலை ஒன்றியம் ஒன்றிய குழு தலைவர் ஜீவா மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாகாளீஸ்வரன், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, குழந்தை நல குழு உறுப்பினர் புவனேஸ்வரி, போளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன், ஜமணாமரத்தூர் வட்டாட்சியர் சங்கரன் உள்ளிட்டோர் பல்வேறு கருத்துகளை வழங்கினார்கள்.பின்னர் ஜமணாமரத்தூர் உதவி காவல் ஆய்வாளர் முருகன் நன்றி உரையாற்றினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!