17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆஸ்டின் பட்டியில் வாலிபர் கொலை இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை .

ஆஸ்டின் பட்டியில் வாலிபர் கொலை இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை .

எழுதியவர்: mohan June 26, 2021, 3:12 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஆஸ்டின்பட்டி அருகே ஒருவர் பிணமாக இருப்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கை, மார்பு, தலை ஆகிய இடங்களில் வெட்டப்பட்டு கிடந்த ஒருவரின் உடல் கிடந்தது .இதனை தொடர்ந்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளம் பன்னி யான் கிராமத்தை சேர்ந்த மூக்கன் மகன் ரவி (வயது 32 )என தெரியவந்தது இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த ரவியின் உடலை கைப்பற்றி போலீசார் ஒரு உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!