18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் 12ம் வகுப்புவரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் தலைமறைவு.

செங்கம் பகுதியில் 12ம் வகுப்புவரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் தலைமறைவு.

எழுதியவர்: mohan June 26, 2021, 7:07 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பேருந்து நிலையம் எதிரே பனிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு ரேணுகா என்பவர் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை மருத்துவ இணை இயக்குனர் அவர்களின் ஆலோசனைப்படி செங்கம் அரசு மருத்துவமனை முதன்மை அதிகாரி அருளானந்தம் நேரில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மருத்துவர்கள் வருவதை தெரிந்துகொண்ட ரேணுகா தலைமறைவானார் அதன்பிறகு செங்கம் காவல்துறை உதவியோடு போலி மருத்துவம் பார்க்கப்பட்ட நந்தினி கிளினிக் சீல் வைக்கப்பட்டது தலைமறைவான ரேணுகாவை போலீசார் தேடி வருகின்றனர் இதேபோன்று செங்கம் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் முறையாக மருத்துவம் பயிலாமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதால் பல்வேறு உடல் பிரச்சனைகள் உயிரிழப்புகள் கருக்கலைப்புகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் இதனைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஒரு காலகட்டத்தில் முறையாக மருத்துவம் பார்க்கத் தெரியாமல் பணத்திற்கு ஆசைப்பட்டு மருத்துவம் பார்த்து வருவது கண்டனத்துக்குரியது மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர் பெண் போலி மருத்துவர் தலைமறைவாகியுள்ள தால் மருத்துவ நடத்தி வந்த நந்தினி கிளினிக் சீல் வைக்கப்பட்ட சம்பவம் செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!