வேலூர். ஜூன் 26 – வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் துவங்கிய ஜமாபந்தி நேற்று முடிந்தது.நிகழ்வுக்கு கே.வி.குப்பம் வட்டாட்சியர் ராஜேஷ்வரி தலைமை தாங்கினார். சமூகநலத்திட்டவட்டாட்சியர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.கே.வி.குப்பம் மற்றும் வடுகந்தங்கல் பிர்காவிலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கிராமத்தின் கணக்கு வழக்குகளை சமர்பித்தனர்.அனைத்து கணக்குகளையும் வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏ.காமராஜ் ஆய்வு செய்து பின்பு வருவாய்த்துறையினரை பாராட்டி பேசினார்.
ஆன்லைன் மூலம் பொதுமக்கள் சார்பாக 150 மனுக்கள் பெறப்பட்டு 23 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுஅதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு டிஎஸ்ஓ காமராஜ் வழங்கினார்.வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்துகொண்டனர்.வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி நன்றி கூறினார்.
கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தியில்நலத்திட்ட உதவிகளை வழங்கியமாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ்.
எழுதியவர்: mohan June 26, 2021, 7:02 am




You must be logged in to post a comment.