17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

கீழ்பாலூர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

எழுதியவர்: mohan June 25, 2021, 3:22 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் துவக்கி வைத்தார் இம்முகாமை கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் லஷ்மி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழு செவிலியர்கள் லில்லிமேரி,மல்லிகா சுபா,பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் இம்முகாமில் கீழ்பாலூர் கிராம முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை , ஊராட்சி மன்ற துணை தலைவர் திவாகர், ஊராட்சி எழுத்தர் அண்ணாமலைமற்றும் கீழ்பாலூர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர் இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட கீழ்பாலூர் பொதுமக்கள் ஆர்வமுடன் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனார்.மேலும் ஆறுமாத கர்ப்பிணி தாயும் குழந்தைக்கு பாலூட்டும் தாயும் ஆர்வமுடன் எவ்வித அச்சமும் இன்றி தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!