17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதி அருகே எட்டு ஏக்கர் நெல் பயிரில் வளர்ப்பு பன்றிகள் அட்டூழியம்.

இராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதி அருகே எட்டு ஏக்கர் நெல் பயிரில் வளர்ப்பு பன்றிகள் அட்டூழியம்.

எழுதியவர்: mohan June 25, 2021, 6:44 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் குத்தப் பஞ்சான் கண்மாய் நீர் பாசனத்தில் சுமார் 8 ஏக்கர் நெல் பயிரிடப்பட்டுள்ளது குறிப்பாக ராமர் மற்றும் பூரணம் ஆகிய இருவரின் ஐந்து ஏக்கர் நெல் வயல்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர் நெல் கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 40க்கு மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார் இந்த பன்றிகள் நெற்பயிர்களின் அடியில் மூட்டி சேதப்படுத்தியதால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகிவிட்டது இதுகுறித்து பலமுறை காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆகையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .காவல்துறை நடவடிக்கை எடுத்து பன்றிகளை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!