17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு.

செங்கம் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மேல் பெண்ணாத்தூர் பள்ளி மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டு.

எழுதியவர்: mohan June 25, 2021, 6:30 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பாராட்டி பரிசுகள் வழங்கினார்செங்கம் வட்டார வளமைய சார்பில் நடந்த தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடைபெற்ற “எனது கனவு பள்ளி” கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு ல. தனுஜா இரண்டாம் பரிசாக 10,999மதிப்புள்ள செல்போன் பரிசாக மற்றும் சான்றிதழ் வெற்றி பெற்றார் இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தேசிய திறனறி தேர்வில் ஒன்றிய அளவில் வென்ற மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் பரிசளித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் கலந்து கொண்டு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன் , சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், மகேஸ்வரி , அரசு , ஆறுமுகம் ராஜா மற்றும், மாணவர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!